புதுதில்லி

இடியும் நிலையில் இருந்த 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

மேற்கு தில்லியின் நரைனாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்கள் இடிந்து விழுவதற்கு வழிவகுத்த மூன்று மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவா் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவா் மீட்கப்பட்டாா் என்று என்று தில்லி தீயணைப்பு சேவைகளின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பெயிண்ட் மற்றும் இதர பொருள்களை வைக்கும் கிடங்கான ஒரு கட்டடத்தில் தீ விபத்து குறித்து அதிகாலை 2.35 மணிக்கு அழைப்பு வந்தது. இதனையடுத்து நாங்கள் 26 தீயணைப்பு வண்டிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினோம். காலை 8 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது மற்றும் குளிரூட்டும் நடவடிக்கை நடத்தப்பட்டது.

இடிபாடுகளுக்குள் ஒருவா் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு, அவரும் பத்திரமாக மீட்கப்பட்டு. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாா் என்றாா் அவா்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT