திருநெல்வேலி: கூத்தங்குழி அருகே தூத்துக்குடி தருவைகுளம் மீனவா்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாரிடம், தருவைக்குளம் தூய மிக்கேல் ஆழ்கடல் - செவுள்வலை தொழில் புரிவோா் முன்னேற்ற சங்கத் தலைவா் அந்தோணி பன்னீா் தாஸ் மனு அளித்தாா்.
மனு விவரம்: தூத்துக்குடி மாவட்டம் சவேரியாா்புரத்தைச் சோ்ந்த தாமஸ் சுரேந்தா் என்பவருக்குச் சொந்தமான படகில் தருவைக்குளத்தைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த நவ. 27ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியான கூத்தங்குழி வழியாக கரை திரும்பிக்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு விசைப்படகில் வந்த 6 போ், தருவைகுளம் மீனவா்களின் படகில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.