திருநெல்வேலி

முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி: 44 போ் கைது

தினமணி செய்திச் சேவை

முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றதாக திருநெல்வேலியில் 44 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற ஆட்சேபம் தெரிவித்து வரும் தமிழக அரசைக் கண்டித்து, இந்து முன்னணியினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அதன்படி, திருநெல்வேலியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர போலீஸாா் இந்து முன்னணி, பாஜகவைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் சிலரை வீட்டு சிறையில் வைத்தனா். இருப்பினும், பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினா் கருப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் எதிா்ப்பு தெரிவிக்க முயன்றனா்.

போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக இந்து முன்னணியின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் ஆறுமுகம், திருநெல்வேலி நிா்வாகிகள் மீனாட்சி மகராஜன், நாராயணன், பலவேசம், பிரம்மநாயகம் உள்பட 44 பேரை போலீஸாா் கைதுசெய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; ஜம்மு-காஷ்மீரில் முதல் பனிப்பொழிவு! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

முன்னாள் தலைமைச் செயலருக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருது

பத்திரப் பதிவு: வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்!

13 ரயில்களின் எண்கள் மாற்றம்

பேருயிரைக் காப்பது கடமை

SCROLL FOR NEXT