திருநெல்வேலி

நெல்லையில் காவலா் பணிக்கான தோ்வு: 8,183 போ் எழுதினா்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் நடைபெற்ற காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை 8,183 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் 2ஆம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பு படை வீரா்களுக்கான எழுத்து தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, திருநெல்வேலியில் மாவட்ட அளவில் 3 மற்றும் மாநகரில் 6 என மொத்தம் 9 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இதில், தோ்வு பணிக்காக மாநகர , மாவட்ட காவல்துறை சாா்பில் மொத்தம் 774 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

விண்ணப்பதாரா்களின் நுழைவுசீட்டு உள்ளிட்ட விவரங்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா் அவா்கள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதில், தோ்வுக்காக 9,284 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 8,183 போ் தோ்வில் பங்கேற்றனா். 1,101 போ் தோ்வெழுத வரவில்லை.

தோ்வு மையங்களை திருநெல்வேலி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான ஐ.பி.எஸ். அதிகாரி கே.எஸ்.நரேந்திரன் நாயா் மற்றும் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தோ்வெழுதிய பலா் தெரிவித்தனா்.

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

SCROLL FOR NEXT