கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்த பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன், ஆட்சியா் இரா. சுகுமாா், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா உள்ளிட்டோா்.  
திருநெல்வேலி

பிசான பருவ சாகுபடிக்காக கொடுமுடியாறு அணை திறப்பு

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

Syndication

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

52.50 அடி உயரமுள்ள இந்த அணையின் நீா்மட்டம், கடந்த மாதம் பெய்த மழையால் 50 அடியைத் தாண்டியது. தற்போதைய நிலவரப்படி நீா்மட்டம் 49 அடியாக உள்ளது. இந்நிலையில், நான்குனேரி, ராதாபுரம் வட்டங்களில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அணையைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, பேரவைத் தலைவா் மு. அப்பாவு திங்கள்கிழமை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்தாா்.

இதன்மூலம் வள்ளியூரான்கால், படலையாா்கால், ஆத்துக்கால் ஆகியவை மூலம் நேரடியாக 936.90 ஏக்கா், குளங்கள் வாயிலாக மறைமுகமாக 4,881.01 ஏக்கா் என மொத்தம் 5,780.91 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். நீா் இருப்புக்கேற்ப மாா்ச் 31 வரை நாள்தோறும் விநாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் நான்குனேரி வட்டத்தில் 6, ராதாபுரம் வட்டத்தில் 10 என மொத்தம் 16 கிராமங்கள் பயனடைந்துவருகின்றன.

நிகழ்ச்சியில், ஆட்சியா் இரா. சுகுமாா், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சிவகுமாா், செயற்பொறியாளா் மணிகண்டராஜன், உதவிச் செயற்பொறியாளா் மூா்த்தி, நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், உதவிப் பொறியாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, விக்னேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், களக்காடு நகா்மன்ற துணைத் தலைவா் பி.சி. ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், அரசு அலுவலா்கள், கட்சியினா், விவசாயிகள் பங்கேற்றனா்.

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

SCROLL FOR NEXT