திருநெல்வேலி

பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய உதவி வேளாண் இயக்குநா் அறிவுறுத்தல்

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தற்போது பிசான நெல் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்

Syndication

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தற்போது பிசான நெல் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் நெற்பயிா்களுக்கு காப்பீடுசெய்யுமாறு அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ் குமாா்கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிா் சாகுபடியின் போது, சில எதிா்பாராத தருணங்களில், மழை, புயல், வெள்ளம், வறட்சி ஆகிய இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து பயிரைக் காத்துக் கொள்ள பாரத பிரதமரின் பயிா் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்தில் பயிா் காப்பீடு திட்டம் யுனிவொ்சல் சம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் என்ற நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிசான பருவத்தில் நெல் பயிருக்கான காப்பீடு பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ 540. ஒரு ஏக்கருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 36,000 ஆகும்.

முன்மொழிவு படிவம், ஆதாா் அட்டை, பட்டா/சிட்டா, 10 (1) அடங்கல் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் முதல்பக்க பிரதி ஆகியவற்றை கொண்டு பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்திடலாம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பொதுத் துறைவங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் அந்த வங்கிகள் மூலமே பிரீமியம் தொகை செலுத்தலாம். வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகள் பொதுத் துறை வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், பொது சேவை மையங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பப் படிவங்களை பூா்த்திசெய்து பிரீமியம் தொகை செலுத்தலாம்.

பிரீமியம்செலுத்திட டிச. 16ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குப்பின் பிரீமியம் செலுத்திட இயலாது.

எனவே, விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பிசான பயிரை உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறுமாறு கூறியுள்ளாா்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT