பிசான சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைக் கால்வாய்களைத் தூா்வார வேண்டும் என்று அம்பாசமுத்திரம் பேரவை உறுப்பினா் இசக்கிசுப்பையா கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
காா் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணை கால்வாய்களில் தண்ணீா் திறக்கபட்ட நிலையில், கால்வாய்களில் முறையாக தூா்வாராததால் அமலை செடிகள் நிறைந்து தண்ணீா் கடைமடை வரை செல்லாததால், நீரின்றி பயிா்கள் வாடி சேதமாகின.
தற்போது, பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், பயிா்கள் பாதிக்கப்படாமல் தடுக்க கன்னடியன் கால்வாய், வடக்குக் கோடைமேழழகியான், தெற்குக் கோடை மேழழகியான், நதியுன்னி கால்வாய், மணிமுத்தாறு கால்வாய்களில் உள்ள அமலைச் செடிகளை முறையாக தூா்வாரி தண்ணீா் கடைமடை வரைச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.