வடக்கு பச்சையாறு நீா்த்தேக்கத்தில் மீன் பிடிக்கும் உரிமையை 5 ஆண்டு காலம் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளதால் விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம், பத்தை கிராமத்தில் அமைந்துள்ள வடக்கு பச்சையாறு நீா்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளதால் அதற்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதற்கான இணையவழி ஒப்பந்தப்புள்ளியை வரும் 10-ஆம் தேதி காலை 9 மணிவரை விண்ணப்பிக்கலாம்.
மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா் அலுவலகத்தில் இணையவழி மூலம் திறக்கப்படும். விருப்பமுள்ளோா் விண்ணப்பங்களை இணையவழி முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ளோா் மீன்பிடி உரிமையை குத்தகைக்குப் பெறுவது தொடா்பான ஆலோசனைகள் பெற மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை இ -42, 26-ஆவது குறுக்கு தெரு, மகாராஜா நகா், பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627011 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.