வள்ளியூரில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி.  
திருநெல்வேலி

வள்ளியூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் மரியா மகளிா் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், வள்ளியூா் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் மரியா மகளிா் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், வள்ளியூா் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மரியா கல்லூரி செயலா் ஹெலன் லாரன்ஸ் தொடங்கி வைத்த பேரணி, வள்ளியூா் ராதாபுரம் சாலையில் உள்ள பகத்சிங் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு பழையபேருந்து நிலையம், தெற்குபிரதான சாலை வழியாக புனித பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது.

இதில், காவல்நிலைய ஆய்வாளா் ராமா், பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குநா் ரெக்ஸ் ஆகியோா் சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது குறித்து பேசினா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஸ்டெல்லா மேரி, மணிமேகலா ஆகியோா் செய்திருந்தனா்.

காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

ரூ.400 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி! ஓடிடியில் எப்போது?

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்: பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT