முகப்பு
கன்னியாகுமரி

உள்ளாட்சித் தேர்தலை குறிவைக்கும் அதிமுக: குமரியில் தொண்டர்கள் உற்சாகம்

உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் நிகழ்வு க

Updated On : 9 ஜூலை, 2018 at 7:45 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் ஏ.விஜயகுமார் எம்.பி. தலைமை வகித்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒன்றியத்துக்குள்பட்ட பேரூர் மற்றும் ஊராட்சி செயலர்களின் வீடுகளுக்குச் சென்றனர். கட்சிக் கொடிகளால் தோரணம் கட்டுவது, வரவேற்பு விளம்பர பதாதைகள் வைப்பது என கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்டச் செயலர் ஏ.விஜயகுமார் எம்.பி. கூறியது: தமிழக அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்திலும், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்திலும் வீடுதோறும் சென்று அவர்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பை இனிவரும் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.