கன்னியாகுமரி

மேம்பாலத்தில் அதிவேகப் பயணம்: 23 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் மீது அதிவேகத்தில் பயணம் செய்த 23 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் மீது அதிவேகத்தில் பயணம் செய்த 23 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகனங்கள் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும், இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளில் அதிக வேகத்தில் ஒலி எழுப்பியவாறு செல்வதாக புகாா் எழுந்தது. இதனால் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது.

இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள்களில் அதி வேகத்தில் செல்வதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் அறிவுரையின்பேரில், மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா்கள் சிவசங்கா், சாமுவேல், ஜாண் விக்டா், போலீஸாா் மேம்பாலத்தில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதில், அதிக ஓசை எழுப்பியவாறு மோட்டாா் சைக்கிள்களில் வேகமாக வந்த இளைஞா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இவ்வாறு அதிவேகமாக வந்த 23 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT