முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் அருகே மீனவர்கள் இடையே தகராறு: 2 பேர் கைது

குளச்சல் அருகே படகு நிறுத்துவதில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:06 am IST
பகிர்:

குளச்சல் அருகே படகு நிறுத்துவதில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (30). ஆழ்கடலில் மீன் பிடித்து விட்டு வழக்கம் போல் குளச்சல் துறைமுகத்தில் விசைப்படகை நிறுத்தச் சென்றாராம். அப்போது அவருக்கும்,  மரமடியைச் சேர்ந்த விமல்ராஜ் (35) என்பவருக்கும் இடையே படகு நிறுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதாம்.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியது.
இந்த மோதலில் சேவியர், ஜெயசீலன் மற்றும் சேவியர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.  அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும் குளச்சல் போலீஸில் அளித்த புகாரின் பேரில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார்  விமல்ராஜ், போர்ஜியோ ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.