கன்னியாகுமரி

மத்திய அரசின் தவறான கொள்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்: காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார்

மத்திய அரசின் தவறான கொள்கையால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார்.

DIN

மத்திய அரசின் தவறான கொள்கையால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் அழகியமண்டபத்தில் நடைபெற்றது.   
திமுக மாவட்டச் செயலர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஆர். செல்லசாமி, முன்னாள் அமைச்சர் கு.லாரன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் இசக்கிமுத்து,  மதிமுக ஜே.பி.சிங், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர்  ஷாஜகான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் காதர் மொகைதீன் உள்ளிட்டோர் பேசினர். 
தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் பேசியது: மத்திய அரசு ரப்பரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதனால் உள்நாட்டில் உற்பத்தியாகும் ரப்பருக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அரசின் தவறான கொள்கையால் ரப்பர் விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ராகுல் காந்தி பிரதமராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றார் அவர். 
கூட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜான்கிறிஸ்டோபர், காஸ்டன் கிளிட்டஸ்,  ஜான்பிரைட்,  நகரத் தலைவர் ஹனுகுமார்,  முன்னாள் எம்.பி. பெல்லார்மின், எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், தக்கலை வட்டாரச் செயலர் சுஜா ஜாஸ்மின்,  முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், நகரச் செயலர் மணி,  திமுக ஒன்றியச் செயலர்கள் அருளானந்த ஜார்ஜ், (தக்கலை)  ஜான்பிரைட் (திருவட்டாறு), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மாத்தூர் ஜெயன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 இரண்டடுக்கு பேருந்துகளுக்கு விரைவில் ஒப்பந்தம்

மக்கிரிபாளையம் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் தொடக்கம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேன் திருட்டு வழக்கில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT