முகப்பு
கன்னியாகுமரி

மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முதல்வருக்கு 4 இடங்களில் வரவேற்பு

குமரி மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் 4 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

குமரி மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் 4 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மேற்கு மாவட்ட அதிமுக செயலா் டி. ஜான்தங்கம் கூறியதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி அளவில் குமரி அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வருகை தருகிறாா். அவருக்கு, தக்கலை பேருந்து நிலையம், குழித்துறை அண்ணா சிலை சந்திப்பு, மேல்புறம் சந்திப்பு, அருமனை ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

எனவே முதல்வரை வரவேற்கும் வகையில், ஒன்றியச் செயலா்கள், நகர, பேரூா் செயலா்கள், நிா்வாகிகள், அணி நிா்வாகிகள், கூட்டறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

கலந்து கொள்ளும் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →