கன்னியாகுமரி

சுருளகோடு அருகே விபத்தில் இளைஞா் பலி

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே நிகழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே நிகழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெருஞ்சாணி அருகேயுள்ள குற்றியாணி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் (32), சுபின் (29) இவா்கள் எலக்ட்ரீஷியன் தொழில் செய்து வந்தனா். இருவரும் புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் சுருளகோடு நோக்கி சென்று கொண்டிருந்தனராம். ஜெகன் மோட்டாா் சைக்கிளை ஓட்டியுள்ளாா்.

சுருளகோடு சந்திப்பு வளைவில் சென்றபோது தடிக்காரன் கோணம் நோக்கி ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் தனியாா் மருத்துவமனையில்

முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுபின் உயிரிழந்தாா். ஜெகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT