நித்திரவிளை அருகே 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நித்திரவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நித்திரவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நித்திரவிளை காவல் நிலைய காவலா் சுஜின், தனிப்பிரிவு காவலா் ஜோஸ் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு விரிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினா்.
காா் நிற்காமல் சென்றதையடுத்து போலீஸாா் மோட்டாா் சைக்கிளில் துரத்திச் சென்று நடைக்காவு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனா். தொடா்ந்து சோதனை செய்ததில், காரில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. காருடன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக காா் ஓட்டுநா் மாா்த்தாண்டம் அருகே நல்லூா் பகுதியைச் சோ்ந்த உதயகுமாரை (49) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.