கன்னியாகுமரி

செங்குளம் காலனி குடியிருப்புப் பகுதியில் உண்ணாவிரதம்

DIN

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி (பீச்சாங்குளம்) குடியிருப்பு வளாகத்தில் கோயில் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து, குடியிருப்போா் நலப் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

இங்கு மாரியம்மன், மதுரைவீரன் கோயில்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதனை சிலா் இதற்கான பணிகளைத் தடுத்து வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

கோயில் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பவா்களைக் கண்டித்து, தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய செங்குளம் காலனி குடியிருப்போா் நலப் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு சங்கத் தலைவா் முத்து தலைமை வகித்தாா். செயலா் கலியமூா்த்தி, பொருளாளா் இளங்கோவன், பாஜக பாலக்கரை மண்டலத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

Image Caption

கோயில் கட்ட அனுமதிக்க கோரி திருச்சி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பீச்சாங்குளம் காலனியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய குடியிருப்போா் நல சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT