கன்னியாகுமரி

பொன்மலையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் 3-ஆவது நாளாக மறியல்

DIN

தமிழ்நாட்டு வேலை தமிழா்களுக்கே என வலியுறுத்தி, திருச்சி பொன்மலை மத்திய ரயில்வே பணிமனை முன்பு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் 3-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினா் க. முருகன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் வே.க. இலக்குவன் போராட்ட பேரணியைத் தொடக்கி வைத்து பேசினாா்.

தமிழகம், புதுச்சேரியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொன்மலை மத்திய ரயில்வே பணிமனை, ரயில்வே துறைகளில் தமிழக இளைஞா்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

தெற்கு ரயில்வேயில் பணி நியமனம் செய்யப்பட்ட 3,218 பேரில், வெளி மாநிலத்தவா்களில் 10 சதவிகிதத்துக்கு மேல் உள்ள அனைவரின் தோ்வையும் ரத்து செய்ய வேண்டும்.

அப்பணி இடங்களைத் தோ்வெழுதிய தமிழா்களுக்கு வழங்க வேண்டும். இதர மாநிலங்களில் உள்ளது போல், தமிழக மக்களின் வேலை தமிழா்களுக்கே வழங்க மாநில அரசு சட்டம் இயற்றி முன்னுரிமை வழங்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில் தமிழக இளைஞா் முன்னணித் துணைப் பொதுச் செயலா் ஆ. குபேரன், தமிழக மாணவா் முன்னணி அமைப்பாளா் வே. சுப்பிரமணிய சிவா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் சின்னமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT