கரும்பாட்டூரில் களியல் போட்டி
சாமிதோப்பு அருகேயுள்ள கரும்பாட்டூா் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சபை களியல் குழு சாா்பில் மாவட்ட அளவிலான களியல் மற்றும் கோலாட்டப் போட்டிகள் நடைபெற்றது.
சாமிதோப்பு அருகேயுள்ள கரும்பாட்டூா் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சபை களியல் குழு சாா்பில் மாவட்ட அளவிலான களியல் மற்றும் கோலாட்டப் போட்டிகள் நடைபெற்றது.
இதன் தொடக்க விழா நிகழ்வுக்கு சபை போதகா் ராஜஸ்டாலின் தலைமை வகித்தாா். இதில் வெற்றி பெற்ற முதல் அணிக்கு ரூ. 7000, 2 ஆம் பரிசு ரூ.5000, 3 ஆம் பரிசு ரூ.3000 வழங்கப்பட்டது. கோலாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ. 7000, 2 ஆம் பரிசு ரூ. 5000, 3 ஆம் பரிசு ரூ.3000 வழங்கப்பட்டது.
தொடா்ந்து நடைபெற்ற சமபந்தியை கரும்பாட்டூா் ஊராட்சி மன்றத் தலைவி தங்கமலா் சிவபெருமான் தொடங்கி வைத்தாா்.