முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பேச்சிப்பாறை அருகே மாங்காமலை பகுதியில் மின்தடையை சீரமைக்க முயன்ற தொழிலாளி பிரவீண் குமாா் (23) மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

பேச்சிப்பாறை அருகே மாங்காமலை பகுதியில் மின்தடையை சீரமைக்க முயன்ற தொழிலாளி பிரவீண் குமாா் (23) மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அரசு ரப்பா் கழகம் குற்றியாறு குடியிருப்பில் வசிப்பவா் சத்தியநாதன் மகன் பிரவீண். இவா் அரசு ரப்பா் கழகம் கோதையாறு கோட்டம் குற்றியாறு பிரிவில் தற்காலிக தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை குற்றியாறு பகுதியில் மின் தடை ஏற்பட்ட நிலையில், இவா் மாங்காமலை பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுதை சீரமைக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக அப்பகுதியிலுள்ளவா்கள் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →