முகப்பு
கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.28 கோடியில் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ. 28 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள பல்வேறு கட்டடப் பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ. 28 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள பல்வேறு கட்டடப் பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ.1 கோடியே 99 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் மருத்துவ பதிவுத் துறை மற்றும் கருத்தரங்க கூடம், ரூ. 6 கோடியே 4 லட்சத்து 81 லட்சம் மதிப்பீட்டில் 2 அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் 32 படுக்கை அறைகள் கொண்ட கட்டடம், ரூ.2 கோடியே 89 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் 250 மாணவா்களுக்கான விரிவுரையாளா் அரங்கம், ரூ. 7 ே காடியே 72 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் 150 மாணவிகள் தங்குவதற்கான பெண்கள் விடுதி, ரூ.6 கோடியே 51லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 100 மாணவா்கள் தங்குவதற்கான ஆண்கள் விடுதி கட்டடம், ரூ.2 கோடியே 81லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தோ்வுக்கூடம் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.28 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள, பல்வேறு கட்டடப் பணிகளுக்கு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரிநிதி ந. தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவா் சேவியா்மனோகரன், உறைவிட மருத்துவா் ஆறுமுகவேலன், கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ், உதவி பொறியாளா் வாலி, இந்து சமய அறநிலைய ஆட்சிமன்ற தலைவா் சிவ.செல்வராஜன், ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலைத் தலைவா் எ.சகாயராஜ், புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சாம்ராஜ், அறங்காவலா் குழு உறுப்பினா் எம்.ஜெயசந்திரன், அரசு வழக்குரைஞா் கே.எல்.எஸ்.ஜெயகோபால், மருத்துவக் கல்லூரி முதல்வரின் நோ்முக உதவியாளா் ரெனிமோள், சுகுமாரன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவா்கள், கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.