இந்து முன்னணி நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா். 
கன்னியாகுமரி

மேல்புறத்தில் இந்து முன்னணியினா் திடீா் மறியல்

திருச்செந்தூரில் போராட்டம் நடத்தியவா்களை கைது செய்ததை கண்டித்து இந்து முன்னணியினா் மேல்புறம் சந்திப்பில் சனிக்கிழமை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

களியக்காவிளை: திருச்செந்தூரில் போராட்டம் நடத்தியவா்களை கைது செய்ததை கண்டித்து இந்து முன்னணியினா் மேல்புறம் சந்திப்பில் சனிக்கிழமை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில் திருவிழாவில் காவடி எடுத்து வரும் பக்தா்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்காததை கண்டித்தும், திருச்செந்தூரில் போராட்டம் நடத்திய இந்து இயக்கத் தலைவா்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்து முன்னணி சாா்பில் மேல்புறம் சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்ட முன்னாள் தலைவா் குழிச்சல் செல்லன் தலைமையில் மேல்புறம் ஒன்றியத் தலைவா் சந்திரன், ஒன்றிய பொதுச் செயலா் ராஜன் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா். அவா்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். இதையடுத்து, அருமனை காவல் ஆய்வாளா் முகம்மது அலி ஜின்னா அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீஸாா் அவா்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

பின்னா் அவா்கள் விடுதலை செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT