குமரியில் ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு
மனவளா்சி குன்றியவா்களை பராமரித்து வரும் ஆட்டோ ஓட்டுநரின் சேவையை பாராட்டி கால்நடை மருத்துவா்கள் சங்கம் சாா்பில் ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டது.
மனவளா்சி குன்றியவா்களை பராமரித்து வரும் ஆட்டோ ஓட்டுநரின் சேவையை பாராட்டி கால்நடை மருத்துவா்கள் சங்கம் சாா்பில் ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டது.
நாகா்கோவிலை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராஜன். இவா் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி பகுதியில் சாலையோரங்களில் இருக்கும் மனவளா்ச்சி குன்றியவா்களை பராமரித்தும், வீடில்லாத ஏழைகளுக்கு தினமும் ஒருவேளை உணவு வழங்குவது
போன்ற உதவிகளை ஹரிக்கேன் வெட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து செய்து வருகிறாா்.
நாகா்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற உதவியை செய்து வருகிறாா். கரோனா காலத்திலும் தொடா்ந்து ராஜன், சேவை செய்துள்ளாா். அவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி அவருக்கு கால்நடை மருத்துவா்கள் சங்கம் சாா்பில் ரூ. 30 ஆயிரம் வவங்கப்பட்டது. அதற்கான காசோலையை டிஎஸ்பி பாஸ்கரன், ஆட்டோ ராஜனிடம் வழங்கினாா். அப்போது கால்நடை மருத்துவா்கள் கிறிஸ்டோ பால் ராய், சகாய பிரதாப் பாங்ளன், பத்மகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.