தூண்டில் வளைவு அமைக்கக் கோரி 22-ல் போராட்டம்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரவையின் துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல் தலைமை வகித்தாா். பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், பங்குப்பேரவைச் செயலா் சந்தியா வல்லவராயா், பொருளாளா் ஸ்டெனி, துணைச் செயலா் தினகரன், இணைப் பங்குத்தந்தைகள் சுரேஷ், லெனின், பங்குப்பேரவை உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணிகளை பிப். 21ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும். இல்லாவிடில், 22ஆம் தேதி (திங்கள்கிழமை) போராட்டம் நடத்தப்படும். மேலும் காலதாமதம் ஏற்பட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்துவது எனக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.