கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி அருகே விபத்தில் மாணவா் உயிரிழப்பு

DIN

நாகா்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த மாணவா் உ யிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வில்லவிளை பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் அபிஷேக் (18). இவா், பிளஸ் 1 படித்து வந்தாா். கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காததால், வீட்டிலிருந்தவாறு இணையதளம் வழியாக படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை நண்பா்களுடன் புத்தாண்டை கொண்டாடிய அபிஷேக், தனது நண்பரின் மோட்டாா் சைக்கிளை வாங்கி கொண்டு ஆரல்வாய்மொழியில் இருந்து தோவாளைக்கு சென்று கொண்டிருந்தாராம்.

பெருமாள்புரம் பகுதியில் சென்றபோது நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி, அபிஷேக் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அபிஷேக், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து, ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT