கிள்ளியூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் 300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமுக்கு, மருத்துவ அலுவலா் ரமாமாலினி தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா்.
இதில், சுகாதார ஆய்வாளா்கள் பினேஷ், முருகன், செவிலியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
காஞ்சிரோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், 240 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் ரமா மாலினி தலைமை வகித்தாா். மருத்துவா் சாரதி முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா்கள் மேஷாக், ஜெனின் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.