முகப்பு
கன்னியாகுமரி

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கல்

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடிக் கடன் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடிக் கடன் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் மூலமாக மாவட்ட திட்ட வங்கியாளா்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதில், 5 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடிக் கடன் ரூ.65 லட்சம், 5 தெருவோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50ஆயிரம் ஆகியவற்றுக்கான காசோலையும், மாநில அளவிலான விருது பெற்ற நெட்டாங்கோடு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயம் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.