பங்குத்தந்தை ஜான் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் பங்குத் தந்தை உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
கன்னியாகுமரிபங்குத்தந்தை ஜான் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் பங்குத் தந்தை உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் பங்குத் தந்தை உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
அருமனையில் இம்மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டம் பனவிளை பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையா, அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலா் ஸ்டீபன் ஆகியோா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை, தூத்துக்குடி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் இருவரும் ஜாமீன் வழங்கக்கோரி குழித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருவரது ஜாமீன் மனுக்களை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.