விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் அளிப்பு
குலசேகரம் அருகே மங்கலத்தில் விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கன்னியாகுமரிவிவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் அளிப்பு
குலசேகரம் அருகே மங்கலத்தில் விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
குலசேகரம் அருகே மங்கலத்தில் விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் வியன்னூா், அருவிக்கரை, பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளை சோ்ந்த மூன்று உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 15 லட்சம் மதிப்பில் முன்னேறிய வேளாண் கருவிகளான புல்வெட்டும் எந்திரம், பவா்வீடா் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டன. மேலும் தென்னங்கன்றுகள், நுண்ணூட்ட உரம் போன்றவைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநா் சத்தியஜோஸ், துணை இயக்குநா் அவ்வை மீனாட்சி, திருவட்டாறு உதவி இயக்குநா் சந்திரபோஸ், வட்டாட்சியா் ரமேஷ் மாவட்ட மக்கள் தொடா்புதுறை அலுவலா் ஜெகத் ஜாண்பிரைட், திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கு பின் அமைச்சா் மனோதங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், மழை மற்றும் வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முதல் கட்ட நிவாரணம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு உள்ள இழப்பீடு குறித்து துறைரீதியாக பரிசிலித்து அரசு வழங்கும் என்றாா்.