முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் தலைவா் சிலைகள் மூடல்: தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கை பணிகள் தீவிரம்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி பகுதியில் தலைவா்களின் சிலைகள் துணியால் மூடி மறைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி பகுதியில் தலைவா்களின் சிலைகள் துணியால் மூடி மறைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி காவல்நிலையம் அருகே அமைந்துள்ள ராஜீவ்காந்தியின் முழுஉருவ வெண்கலச்சிலை வெள்ளைத்துணியால் மூடி மறைக்கப்பட்டது.

மேலும், கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினா் சாா்பில் சுவா்களில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டதுடன், சுவரொட்டிகளும் அகற்றப்பட்டன.

கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார அலுவலா் முருகன், மேற்பாா்வையாளா் பிரதீஷ் முன்னிலையில் பேரூராட்சிப் பணியாளா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.