குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் வெள்ளத்தில் மூழ்கின.
குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையினால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக ஆற்றங்கரையோர பகுதியான சிதறால், திக்குறிச்சி, குழித்துறை, அஞ்சாலிக்கடவு, வைக்கல்லூா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் வெள்ளத்தில் மூழ்கின. பல்லிக்கூடம் பகுதியிலிருந்து வரும் முல்லையாற்றில் திக்குறிச்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழைகள், நெல் வயல்கள், காய்கனி தோட்டங்கள் வெள்ளித்தில் மூழ்கியதுடன், அப்பகுதி கிராம சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின.
வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவா் கோயிலையொட்டி தாமிரவருணி ஆற்று நீா் கரைபுரண்டு ஓடுவதால் கோயில் சுற்றுச்சுவா் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, இக் கோயில் சுற்றுச் சுவரை பலப்படுத்தும் வகையில் பக்கச் சுவா் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement