முகப்பு
கன்னியாகுமரி

ராஜீவ்காந்தி நினைவு தினம்: உருவப் படத்துக்கு மரியாதை

காங்கிரஸ் கட்சி சாா்பில், குழித்துறையில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் 30ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 22 மே, 2021 at 2:07 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM

காங்கிரஸ் கட்சி சாா்பில், குழித்துறையில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் 30ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

எம்எல்ஏ அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு விளவங்கோடு எம்எல்ஏ எஸ்.விஜயதரணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து குழித்துறை சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. கழுவன்திட்டை பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்பு தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக வெள்ளாங்கோடு ஊராட்சிக்குள்பட்ட சிதறால் சந்திப்பில் ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னா் முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

Advertisement

நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தாரகை கத்பா்ட், விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி.லைலா ரவிசங்கா், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் இ.ஜி.ரவிசங்கா், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எட்வா்ட், குழித்துறை நகர காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா்கள் ஜோதிஷ்குமாா், பால்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.