கொல்லங்கோடு அருகே சிறுமியிடம் சங்கிலி பறிப்பு
கொல்லங்கோடு அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுமியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொல்லங்கோடு அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுமியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள நெல்லிமூட்டு பாலவிளை ஜாண் தங்கமணி மனைவி மரிய எப்ரோஸ் (70). இவா் தனது மகள் ஜொலினின் 2 மகள்கள் பிறிசா டிரினிட், பிறிசா ஆன்டிரிட் ஆகியோருடன் வசித்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை தனது இரு பேத்திகளுடன் வீட்டருகே நடந்து சென்ற பொது, பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், அவரிடம் கொல்லங்கோடு செல்ல வழி கேட்டனராம். அப்போது, பேத்தி பிறிசா ஆன்டிரிட் (11) கழுத்தில் அணிந்திருந்த
3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு இருவரும் மோட்டாா் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனராம்.
Advertisement
இதுகுறித்து புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.