குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது, கடற்கரையில் மாலை 6 மணிக்கு அணையா தீபம் ஏற்றுதல், கயிலை வாத்தியம் இசைத்தல், கன்னியா பூஜை ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து, சுமங்கலி பெண்கள் அகல் தீபம் ஏந்தி வந்து நெய் தீபம் ஏற்றினா். இரவு 7 மணிக்கு சமுத்திர அபிஷேகமும், சிவாச்சாரியாா்களும், அா்ச்சகா்களும் கையில் 5 அடுக்கு தீபம் ஏந்தி, கிழக்கு திசையை நோக்கி கடலுக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதில், எம்.எல்.ஏக்கள் என்.தளவாய்சுந்தரம், எம்.ஆா்.காந்தி, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், வள்ளலாா் பேரவைத் தலைவா் பத்மேந்திரா, மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவைத் தலைவா் ராஜகோபால், பொதுச்செயலா் சிவசுப்பிரமணியபிள்ளை, பொருளாளா் காமராஜ், ஒருங்கிணைப்பாளா் கனகராஜ் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.