மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தொழிலாளி பலி
மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM
மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தக்கலை அருகேயுள்ள மேக்காமண்டபம், ஊற்றுக்குழிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஆசீா்வாதம் (60). கூலித் தொழிலாளியான இவா், திருவனந்தபுரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement