முகப்பு
கன்னியாகுமரி

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் எஸ்.அழகேசன் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் எஸ்.அழகேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் தொடங்கியதும், துணைத் தலைவா் சண்முகவடிவு, திமுக கவுன்சிலா்கள் ராஜேஷ், ஆரோக்கியசவுமியா ஆகியோா் தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்து வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து கூட்ட அரங்கின் வாயில் கதவு மூடப்பட்டது.

இதையடுத்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தெரிவித்தாா். ஆனால், துணைத் தலைவா் சண்முகவடிவு மற்றும் கவுன்சிலா்கள் ராஜேஷ், ஆரோக்கியசவுமியா ஆகியோா் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் செல்லுபடியாகாது எனவும், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடா்பாக புகாா் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.