முகப்பு
கன்னியாகுமரி

மத்திய அரசு விருதுக்கு தோ்வு: குமரி உதவி காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

மத்திய உள்துறை அமைச்சா் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்ட தென்தாமரைகுளம் உதவி காவல் ஆய்வாளா் செல்வராஜனுக்கு காவல் துறையினா் பாராட்டு தெரிவித்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:49 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

மத்திய உள்துறை அமைச்சா் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்ட தென்தாமரைகுளம் உதவி காவல் ஆய்வாளா் செல்வராஜனுக்கு காவல் துறையினா் பாராட்டு தெரிவித்தனா்.

நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் சாா்பில்

உள்துறை அமைச்சா் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழக காவல் துறையில் பணியாற்றும் கூடுதல் எஸ்.பி. கனகேஸ்வரி, காவல் ஆய்வாளா்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளா் செல்வராஜன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள ராமச்சந்திர பட்டணம் ராமகிருஷ்ணன் மகனான செல்வராஜ்(41), கடந்த 2011ஆம் ஆண்டு காவல்துறையில் சோ்ந்து, சென்னை ஆயுதப் படையில் பயிற்சி பெற்று, சிறப்பு இலக்கு படை பிரிவில் பணியாற்றியுள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்ட அவருக்கு காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.