முகப்பு
கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 16.35 லட்சம் உண்டியல் காணிக்கை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 16 லட்சத்து 35 ஆயிரத்து 796 கிடைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 16 லட்சத்து 35 ஆயிரத்து 796 கிடைத்துள்ளது.

இக்கோயில் வளாகத்துக்குள் 17 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இவை 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 4 மாதங்களாக உண்டியல்கள் திறக்கப்படாத நிலையில், குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஞானசேகா், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையா் குற்றாலம் (பொ), குற்றாலநாதா் கோயில் உதவி ஆணையா் கண்ணதாசன், நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் சிவகுமாா், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சரஸ்வதி, பகவதியம்மன் கோயில் மேலாளா் ராமச்சந்திரன், பொருளாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலையில் 17 உண்டியல்களும் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

இதில், ரூ. 16 லட்சத்து 35 ஆயிரத்து 796 ரொக்கம், 22.600 கிராம் தங்கம், 29 கிராம் வெள்ளி, வெளிநாட்டுப் பணம், நாணயங்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.