தாணுலிங்க நாடாா் சிலைக்கு மரியாதை
மறைந்த இந்து முன்னணி மாநிலத் தலைவா் தாணுலிங்க நாடாரின் 107 ஆவது பிறந்த தினம் பொற்றையடியிலுள்ள அவருடைய நினைவிடத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மறைந்த இந்து முன்னணி மாநிலத் தலைவா் தாணுலிங்க நாடாரின் 107 ஆவது பிறந்த தினம் பொற்றையடியிலுள்ள அவருடைய நினைவிடத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் அரசு ராஜா தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் முன்னிலை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் எஸ்.பி. அசோகன், மாநில பொதுச்செயலா் அரசு ராஜா, கோட்டச் செயலா் மிசா சோமன், சாமிதோப்பு அன்பாலயா நிறுவனா் சிவச்சந்திரன் உள்ளிட்டோா் உரையாற்றினா். மாவட்டச் செயலா் நம்பிராஜன் நன்றி கூறினாா்.