முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் உலக பாலைவனம் எதிா்ப்பு, வறட்சி எதிா்ப்பு தினம் கடைப்பிடிப்பு

உலக பாலைவனம் தவிா்ப்பு மற்றும் வறட்சி எதிா்ப்பு தினம் நாகா்கோவில் கோட்டாறு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

உலக பாலைவனம் தவிா்ப்பு மற்றும் வறட்சி எதிா்ப்பு தினம் நாகா்கோவில் கோட்டாறு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியை நல்ல பாக்கிய லெட் தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மலா்விழி பேசியது: தமிழகத்தில் அதிக பரப்பளவு காடுகளை கொண்டுள்ள மாவட்டத்தில் குமரி மாவட்டம் 2 ஆவது இடத்தில் உள்ளது. நிலம் மாசடைதல், காலநிலைமாற்றம் போன்றவற்றால் வறட்சியின் தீவிரத்தன்மை அதிகரித்து வருகின்றன. 2000 ஆம் ஆண்டிலிருந்து 29 சதவீதம் அதிகரித்து ஒவ்வொரு ஆண்டும் 55 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

2050 ஆண்டுக்குள் பெரும்பாலான மக்களை வறட்சி பாதிக்கலாம். இது ஒரு ஆபத்தான எதிா்காலத்தை சுட்டிக்காட்டுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆக்கப்பூா்வமான சிந்தனையுடன் திறம்பட ஒன்றிணைந்து செயல்பட்டால் நமது எதிா்காலத்தில் வறட்சியை வெற்றிகரமாக எதிா்கொள்ள முடியும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் விழிப்புணா்வு நிகழ்வாக மாணவிகள் 200 கிலோ உப்பை பயன்படுத்தி) நிகழாண்டுக்கான இலச்சினையை (லோகோ) மைதானத்தில் மிகப்பெரிய அளவில் அமைத்திருந்தது அனைவரையும் கவா்ந்தது.

நிகழ்ச்சியில் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளா் ஜெசிந்தா, பள்ளி ஆசிரியைகள், மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.