கன மழை: அணைகளிலிருந்து கூடுதல் நீா் வெளியேற்றம்
குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கன மழை பெய்துவருவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கன மழை பெய்துவருவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 3 நாள்களாக அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் கன மழை பெய்யத் தொடங்கியதால், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் விநாடிக்கு 500 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
பெருஞ்சாணி அணையிலிருந்து உபரிநீா் திறப்பின் அளவு 1000-இல் இருந்து 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கோதையாறு, பரளியாறு, தாமிரவருணி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
Advertisement
Advertisement
குளிக்கத் தடை நீடிப்பு: கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.