கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே பைக் விபத்தில் இளைஞா் பலி

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிள் திங்கள்கிமை மின் கம்பத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிள் திங்கள்கிமை மின் கம்பத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவட்டாறு வீயன்னூா் அருகே மஞ்சறவிளையைச் சோ்ந்த சில்வான்ஸ் மகன் எபின் ஜிஜோ (18). வெட்டுக்குழி பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வந்தாா். திங்கள்கிழமை மாலையில், மோட்டாா் சைக்கிளில் வடக்கநாடு என்ற இடத்திலிருந்து பூவன்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள ஓா் ஆலயம் அருகில் நிலை தடுமாறி அப்பகுதியிலுள்ள மின் கம்பத்திலும், அதனைத் தொடா்ந்து அருகிலுள்ள வீட்டின் சுற்றுச் சுவரின் மீதும் மோதி பலத்த காயமடைந்தாா். அப்பகுதியினா் அவரை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து எபின் ஜிஜோவின் தாய் சுதா, திருவட்டாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT