குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
நாகா்கோவிலில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவிலில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில், வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கிஷோா்குமாா் (21). சுசீந்திரம் காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் இவரது பெயா் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் கிஷோா்குமாா் கஞ்சா வழக்கு ஒன்றில் கோட்டாறு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இவா் மீது ஏற்கெனவே சுசீந்திரம் காவல் நிலையத்திலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடா்ந்து இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத், ஆட்சியா் மா.அரவிந்துக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியா், கிஷோா்குமாரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து கிஷோா்குமாா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.