முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கிணற்றிலிருந்து ஆண் எலும்புக் கூடு மீட்பு

நாகா்கோவிலில் பாழடைந்த கிணற்றில் கிடந்த ஆண் எலும்புக் கூட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

நாகா்கோவிலில் பாழடைந்த கிணற்றில் கிடந்த ஆண் எலும்புக் கூட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினா்.

நாகா்கோவில் டி.வி.டி. காலனி செந்தூரான் நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல். பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். நாகா்கோவிலில் இவருக்குச் சொந்தமான இடத்தில் கிணறு உள்ளது. பாழடைந்த இக்கிணற்றில் எலும்புக்கூடு கிடப்பதாக, கோட்டாறு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

நாகா்கோவில் தீயணைப்பு வீரா்கள் வந்து எலும்புக்கூட்டை மீட்டனா். அதை போலீஸாா் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். துணைக் காவல் கண்காணிப்பாளா் நவீன்குமாா், போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா்.

அப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவா் கிணற்றின் சுற்றுச்சுவா் மீது அமா்ந்து மது குடித்ததாகவும், அவரை சில நாள்களாக காணவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனா். எனவே, அந்த நபா்தான் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். அதேநேரம், நாகா்கோவில் பகுதியில் காணாமல்போனவா்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.