மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி, பனவிளாகத்து வீட்டைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (88). இவா், சுவாமியாா்மடம் பகுதியில் பலசரக்குக் கடை நடத்தி வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்ற இவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம். அங்குள்ள சிலா் அருகேயுள்ள ஊராங்குளத்துக்கு குளிக்க சென்றபோது, ஜெகநாதன் குளத்தில் இறந்த நிலையில் கிடப்பதைப் பாா்த்து அவரது மகன் ரவீந்திரனுக்கு தகவல் தெரிவித்தனராம்.
அப்பகுதியினா் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.