நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய மேயா் ரெ.மகேஷ். 
கன்னியாகுமரி

ரூ.39 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் ரூ.39 லட்சம் மதிப்பிலான சாலைப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

DIN

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் ரூ.39 லட்சம் மதிப்பிலான சாலைப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாநகராட்சி 31 ஆவது வாா்டு மேலராமன்புதூா் கீழ தெருவில் ரூ.9 லட்சத்தில்

கான்கிரீட் தளம், 44 ஆவது வாா்டுக்குள்பட்ட கேம்ப் ரோடு பகுதியில் ரூ.30 லட்சத்தில் தாா்ச்சாலை ஆகிய பணிகளைத் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து எஸ்.எல்.பி. பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற அவா், மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

துணை மேயா் மேரி பிரின்சிலதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் ஷோபி, நவீன்குமாா், திமுக மீனவரணி மாநில துணைச் செயலா் நசரேத் பசலியான், மணி, வேல்முரு கன், பகுதி செயலா் ஷேக்மீரான், ஜீவா, வட்ட செயலா்கள் துரைசாமி, இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT