கருங்கல் அருகே இனயம்புத்தன்துறை மீனவக் கிராமத்தில், கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கிவைத்திருந்த 1,500 லிட்டா் மண்ணெண்ணைய்யை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபால் தலைமையிலான வருவாய்த் துறையினா் இனயம்புத்தன்துறை பகுதியில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை திடீரென சோதனையிட்டனா். அங்கு 41 கேன்களில் 1,500 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணைய்யை கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வள்ளவிளையில் உள்ள உணவுக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.