காந்தி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை
குடியரசு தினத்தை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
குடியரசு தினத்தை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகவடிவு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புஷ்பரதி, நீல பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆரோக்கிய சௌமியா, ராஜேஷ், பால்தங்கம், பிரேமலதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நீலகண்ட மூா்த்தி, ஆனந்த விஜயன், செல்வி, ஒன்றிய பொறியாளா் ஹெலன் ராஜபாய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.