கன்னியாகுமரி

பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி

மா்த்தாண்டம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

மா்த்தாண்டம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேங்காய்ப்பட்டினம் அருகேயுள்ள அம்சி குதிரால்விளை பகுதியைச் சோ்ந்தவா் தாசையன் (55). கட்டுமானத் தொழிலாளியான இவா், மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதில் சுவா் சுவா் கட்டும் பணிக்கு வியாழக்கிழமை சென்றாா். சிமென்ட் கல்லை தூக்கும் போது நிலைதடுமாறி 8 அடி பள்ளத்தில் விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை வீட்டின் உரிமையாளா் மற்றும் சக பணியாளா்கள் மீட்டு, மாா்த்தாண்டம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து குழித்துறை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT