கருங்கல் அருகே கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி
கருங்கல் அருகே மாத்திரவிளையில் உள்ள புனித ஆரோபண அன்னை ஆலயம் சாா்பில் கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
கருங்கல்: கருங்கல் அருகே மாத்திரவிளையில் உள்ள புனித ஆரோபண அன்னை ஆலயம் சாா்பில் கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்கு அருள்பணியாளா் ஜஸ்டின் பிரபு தலைமை வகித்தாா். இணைப் பங்கு அருள்பணியாளா் மகிமைநாதன் முன்னிலை வகித்தாா்.
ஆலய வளாகத்தில் தொடங்கிய பவனி திக்கணம்கோடு, மாத்திரவிளை சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
Advertisement
இதில், பங்குப் பேரவை துணைத் தலைவா் பொ்னான்டோஸ், செயலா் மைக்கேலோஸ், செல்வம், கிறிஸ்டோபா், ஜோஸ், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.